சனி, 1 செப்டம்பர், 2018

மணவிலக்கு பெற்றிருந்தாலும் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்க சட்ட ஆணையம் பரிந்துரை

புதுடில்லி, செப்.1  மணவிலக்கு பெற்றிருந்தாலும் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கிட வேண்டும் என 21ஆவது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. நாட்டின் 21ஆவது சட்ட ஆணைய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவு கான் தலைமையில் அமைக்கப் பட்டது. இந்த ஆணையத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.  இதனால், சட்ட ஆணையம் பல்வேறு பரிந்து ரைகள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், குடும்ப சட்ட சீர்திருத்தம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மண விலக்கு பெற்ற பெண்களுக்கு, திருமணத்துக்குப் பிறகு கணவன் சுயமாக வாங்கிய சொத்தில் சமபங்கு வழங்கிட வேண்டும். எனவே, மணவிலக்கு பெற்றி ருந்தாலும் கூட, பெண்களுக்கு திருமணத்துக்குப் பிறகு வாங் கப்பட்ட சொத்துக்களில் சமபங்கு வழங்கும் வகையில் தனி நபர் சட்டங்களில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 01.09.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக