ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

அறிந்துகொள்ள வேண்டிய அறிவுசார் சொத்து உரிமைகள்

ஒருவர் சமூகத்தில் அந்தஸ்து உடையவரா என்பதை அவருடைய சொத்துக்கள் மட்டுமே நிர்ணயம் செய்வது இல்லை. அதுபோல சொத்துக்கள் என்று சொல்லும்போது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மட்டுமே அல்லாது கண்களுக்கு புலப்படாத அறிவுசார் சொத்துக்களும் மதிப்பிடப்படுகின்றன. ஒருவர் அறிவாளியாக இருந்து, தன் சுய அறிவால் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் அதுவே அவருடைய பிரதான சொத்தாகிவிடுகிறது. அதற்காக எல்லோரும் அய்ன்ஸ்டியன், டார்வின் மற்றும் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சிறு சிறு மாற்றங்கள்கூட அறிவுசார் சொத்துக்களாக அங்கீகரிக்கப்படுகின்றன. அறிவு சார் சொத்துக்களை அதன் உரிமையாளர் தன்னுடைய வணிகம் மற்றும் வியாபாரத்திலும் முதலீடு செய்ய முடியும். அதனால் பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலைமை அடைய உதவும்.
அறிவுசார் சொத்து உரிமைகளை அவற்றின் தன்மைகளை வைத்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
1. வணிக முத்திரைகள் _Trade marks
ஒரு வாணிகத் தொழில் நிறுவனம் தனது செய்பொருள்கள் மீது பொறிப்பதும், வேறு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாததுமான ஒரு தனிவகை அடையாளம்.
2. பதிப்புரிமை _ Copyright
ஒரு புத்தகம், பாடல், கணினி நிரல் போன்றவற்றின் மூலப்படிவத்தை அச்சிடுதல், நகலாக்கம், நிகழ் கலையாக்கம் முதலியவற்றைச் செய்வதற்கு ஒருவருக்குள்ள சட்டப்படியான தனி உரிமை.
3. காப்புரிமை _patent
ஒரு விளைபொருளை அல்லது கண்டுபிடிப்பைத் தயாரிப்பதற்கான, பயன்படுத்துவதற்கான அல்லது விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ தனி உரிமை.
4. வடிவமைப்பு உரிமை _ design
ஒன்று எப்படி செய்யப்பட வேண்டும். எப்படிச் செயல்படும் என்பதைக் காட்டும் வரைபடம் உருவாக்கும் திறன் மற்றும் முறைமை.
5. புவியியல் அறிகுறிகள் _ Geographical Indication
6. தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள் _ Protection of plant varieties farmers right
7. குறைக்கடத்தி ஒருங்கிணைந்த சுற்றுக்கள் பக்க வடிவமைப்பு உரிமைகள் _ Semiconductor integrated circuits layout design
நோக்கம் scop: அறிவுசார் சொத்து உரிமைகள் உலக அளவில் பெரும் மாற்றத்தையும், முக்கியத்துவத்தையும் அடைந்து வருகின்றன. நவீனமயமான தற்கால சூழ்நிலையில் அறிவுசார் சொத்துக்களின் மதிப்பு கூடிக்கொண்டே வருவதால் அவற்றைப்பற்றி தெரிந்து கொள்வதும் அவசியமாகிவிட்டது. அறிவுசார் சொத்து உரிமை என்பது மனிதனின் அறிவு, விஞ்ஞானம் மற்றும் திறமைக்கான அங்கீகாரம் ஆகும். நம்முடைய படைப்புக்களே நம்முடைய அறிவை வெளிப்படுத்துகின்றன. அறிவுசார் சொத்துக்களை நாம் பதிவு (Register) செய்வதன் மூலம் அதனை பயன்படுத்து-வதற்கான முழு மற்றும் முதன்மை உரிமையை பெறுகின்றோம். நம்முடைய படைப்புகளை பதிவு செய்வது நம்மை பிறரிலிருந்து வித்தியாசப்படுத்தி அதற்கு உண்டான அதிகாரத்தையும் கொடுக்கிறது.
வணிக முத்திரைகள் (Trade mark-
Tm Brand Name (நிறுவன அடையாளம்), Code - (குறியீடு), Logo - (சின்னம்) போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பொருள் Meaning
வணிக முத்திரை என்பது எல்லோராலும் ஙிக்ஷீணீஸீபீ ழிணீனீமீ என்று பிரபலமாக அறியப்படும். ஒருவர் தன்னுடைய பொருள் மட்டும் சேவையை இதன் மூலம் பதிவு செய்து ஏகபோகமாக உபயோகிக்கும் உரிமையை அடைய முடியும்.
உதாரணமாக, Reliance, tata motors, Saravana store, Nilgries,Aircel, Airtel,Sony,Samsung போன்ற அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய Brand name அய் பதிவு செய்து பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
Trade mark Register செய்வதற்கான நோக்கம் என்னவென்றால், தனித்துவமான பெயரை பெறுவதற்காகவும் அதே போன்ற ஒரு brand name அய் பயன்படுத்தி மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் போட்டி நிறுவனங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதும் ஆகும்.Trade mark என்பது தயாரிப்பு. தயாரிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் என இரு வகைகளில் பதியப்படுகிறது.
Trade mark act 1999-இதைப் பற்றிய விவரங்கள் மற்றும் பின்பற்றவேண்டிய நடைமுறைப் படுத்தப்பட்டு Public search என்ற முறையில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட TM பதியப்-பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ளப்படுகிறது. எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்கள் ஏதும் வராமல் தடுக்க இது உதவுகிறது. அதற்கான வடிவங்களில் ஆவணங்களை மற்றும் கட்டணம் சேர்த்து Register-ல் சமர்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பித்ததிலிருந்து TM/SM என்ற குறியீட்டினை பயன்படுத்தலாம். பதிவு செய்து சான்றிதழ் கொடுக்கப்பட்டவுடன் ஸி என்பதை உபயோகிக்கலாம். TM Journal வெளியிடப்படுகிறது. மற்ற சொத்துக்களை போலவே அறிவுசார் சொத்துக்களையும் பரிமாற்றம் மற்-றும் பரிவர்த்தனை செய்ய முடியும்.
நீண்ட காலத்திற்கு புதுப்பித்தல்:
சான்றிதழ் 10 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
தீர்மானம்:
ஜிவி தனித்துவமுடையதாகவும், பிறருடன் ஒப்பிட்டால் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பது அவசியம்.
-உண்மை,16-30.4.16

ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும்


மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்
லக்னோ, ஜூன் 12 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொது சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்து மதவழிபாட்டு இடங் களையும் அகற்ற வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோவின் மொகல்லா தாடா கேரா பகுதியில் பொது வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலாகா பாத் உயர்நீதிமன்றத்தில் 19 பேர் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக் கள், லக்னோ உயர்நீதிமன்றத் தில் நீதிபதிகள் சுதீர் அகர்வால், ராகேஷ் சிறீவாஸ்தவா ஆகி யோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், நடமாடுவதற் கான அடிப்படை உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை உரிமை, பொது இடத்தில் விதிமுறைகளை மீறும் சிலரால் பாதிக்கப்படு வதை அனுமதிக்க முடியாது.
ஆகையால், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக் குப் பிறகு, பொதுச் சாலை களிலோ அல்லது நடைபாதை களிலோ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட அனைத்து மத வழிபாட்டு இடங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள், சாலைகளைப் பராமரிக்கும் துறைகளின் அதிகாரிகள் ஆகி யோருக்கு மாநில அரசு குறிப்பு அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மாநில அரசிடம் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
அதேசமயம், 2011ஆம் ஆண் டுக்கு முன்பு, மேற்கண்ட இடங் களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மதவழிபாட்டு இடங்களை 6 மாதங்களுக்குள் தனியார் நிலத்துக்கு அப்புறப் படுத்த வேண்டும்; அல்லது அகற்றவேண்டும்.
நெடுஞ்சாலைகள், தெருக் கள், நடைபாதைகள், சந்துகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன் படுத்தும் சாலைகளில் எந்த வகையிலும் மதவழிபாட்டு இடங்கள் அமைக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறு திப்படுத்த வேண்டும். இதற் காக மாநில அரசு தனித்திட் டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாதது தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக எடுத் துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-விடுதலை,12.6.16