1947ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசமைப்பின் முகப்புரை அமைந்துள்ளது.
1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டது.
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு, 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசமைப்புப் பேரவையில், முழுமையான ஆதரவோடு, இந்திய அரசமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
இறையாண்மை – முழுவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.
சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம் வாயிலாக அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகப்புரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.
நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சகோதரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.
முகப்புரையின் முக்கியத்துவம் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத் திருத்தம்,“சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு” ஆகிய மூன்று சொற்களை முகப்புரையில் சேர்த்தது.
- விடுதலை நாளேடு, 25.11.2024